இன்று பழைய சினிமா ஒன்று ரோசாப்பூ ரவிக்கைகாரி பார்த்தேன்
பெண் பழைமைக்கும் புதுமைக்கும் நடக்ககும் போராட்டமாக அந்தப் படம் அமைக்கப்பட்டுள்ளது
ரவிக்கை பொடும் பழக்கம் உள்ள ஊரில் படித்த ஒருவளை தன்மகனுக்கு திருமணம் செய்து வைக்கிறாள் ஒருதாய்
மகன் வீட்டில் இல்லாதபோது மருமகளுக்கு சூடு போடுகிறாள் மாமியார்
இதைகண்டு கொதித்த மகன் தாயிடம் நியாயம் கேட்கிறான்
ஒருபெண் கால்கால்போட்டு பாட்டு கேட்பதா
இந்த தப்புக்கு இந்த தண்டனை என்கிறாள்
நீதப்பு செய்தால் என்ன செய்வது என கேட்கிறான் மகன்
நான்தப்பு செய்தாலும் கல்லை பொட்டு கொல்ல வேண்டும் என்கிறாள்
அம்மிகல்லை தூக்கிவந்து உனு தலையில் போட்டுக்கொண்டு சாகு என்கிறான்
நான்என்ன தப்பு செய்தேன் எனகேட்கும் தாயிடம் மகன் கூறுகிறான்
இவளை எனக்கு நீதானே பார்த்து கல்யாணம் பண்ணி வச்ச நீ செய்த தப்புக்கு நீசாகு அல்லது இந்த கல்லை என் தலையில் போட்டு என்னை சாகடி என்று உறக்க கேட்கிறான்
யார் செய்தது தப்பு யார் தீர்மாணிப்பது
காலமும் இடமும் பழைமையும் புதுமைக்கும் நடக்கும் போராட்டம்
பழமைகள் மெல்லச்சாகும்
புதுமைகள் போராட்டத்தால் பூத்துக்கொண்டே இருக்கும்
No comments:
Post a Comment